ஞாபக சக்தியை அதிகரிக்க - To increase memory power

Best Property Management in India

  • +91 766 700 8999
  • Blog




    ஞாபக சக்தியை அதிகரிக்க - To increase memory power
    Writer June 17, 2019

    ஞாபக சக்தியை அதிகரிக்க - To increase memory power

    ஞாபக சக்தியை அதிகரிக்க - To increase memory power

    ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

    இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைய வந்துள்ளன. அத்தகைய தொழில்நுட்பங்களை கையாள்வதற்கு பெரியோர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ சிறிய குழந்தைகளுக்கு நிறைய தெரியும். இவை அனைத்திற்கு அறிவுத்திறன் தான் காரணம்.

    தற்போதுள்ள குழந்தைகள் அனைவரும் மிகுந்த புத்திக்கூர்மையுடன் இருக்கின்றனர். அவர்களிடம் எந்த ஒரு விஷயத்தை சொன்னாலும், அதை அவர்கள் மறக்காமல் ஞாபகத்துடன் வைத்திருப்பார்கள்.

    ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு உணவையும் பெற்றோர்கள் பார்த்து ஆரோக்கியமானதாக கொடுக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு எந்த ஒரு மனஅழுத்தமும் இல்லை.

    ஆனால் பெரியோர்களுக்கு வேலைப்பளுவின் காரணமாக மனதில் அழுத்தம் அதிகரித்து, அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

    எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர். இவை அனைத்திற்கும் சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம்.

    எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம்.

    மீன்

    enter image description here

    மீன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஏனெனில் மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது. மேலும இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக ஹெர்ரிங், சால்மன், சூரை (Tuna), கானாங்கெளுத்தி, பொத்தல், நெத்தலி, மற்றும் மத்தி போன்றவை மிகவும் சிறந்தது.

    க்ரீன் டீ enter image description here

    க்ரீன் டீ க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.

    பெர்ரிஸ்

    enter image description here

    பெர்ரிஸ் பெர்ரிப் பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும். அதிலும் சில பெர்ரிப் பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது.

    **பச்சை இலைக் காய்கறிகள்

    enter image description here பச்சை இலைக் காய்கறிகள்**

    பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அவர்கள் சொன்னது பொய்யல்ல உண்மை தான். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்

    தேன் enter image description here

    தேன் தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

    நட்ஸ் enter image description here

    நட்ஸ் நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.

    பால் பொருட்கள் enter image description here

    பால் பொருட்கள் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இந்த பொருட்களை சாப்பிட்டால், மூளைச் செல்கள் நன்கு செயல்படும். முக்கியமாக தயிரில் அமினோ ஆசிட் தைரோசின் என்னும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது.

    தண்ணீர் enter image description here

    தண்ணீர் மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் தான் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.

    ஒயின்

    enter image description here ஒயின் நிறைய பேர் ஆல்கஹால் பருவதற்கு தடை சொல்வார்கள். ஆனால் ஆல்கஹால் குடிப்பதால், மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். அதிலும் ரெட் ஒயின் தான் மிகவும் சிறந்தது. ஆகவே இதனை குடிப்பதால், மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக இருந்து, அல்சீமியர் நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் ரெட் ஒயின் மூளைக்கு மட்டுமின்றி, இதயத்திற்கும் நல்லது.

    ரோஸ்மேரி enter image description here ரோஸ்மேரி ரோஸ்மேரி சாலட் மற்றும் டாப்பிங்கில் அலங்கரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. அவை மூளையின் இயக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ரோஸ்மேரியில் மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன.

    குழந்தைகளோட ஞாபக சக்தியை எப்படி அதிகரிக்கலாம்!!!

    குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கணும்-னா, அது அந்த தாயோட கையில தான் இருக்கு. சின்ன வயசுலேயே நம்ம குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தா, அதை அவங்க மறக்கமாட்டாங்க. சில குழுந்தைகளுக்கு படித்ததையெல்லாம் மறந்து தேர்வில் ஃபெயில் ஆகும்போது, அது அவர்களுக்கு ஒரு மனக் கஷ்டத்தை தந்து வேதனையைத் தருகிறது. அப்படி இருக்கும் குழந்தைகளது ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில nimmadhi tips

    ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள் : 1. எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும். 2. நிமோனிக்ஸ் (mnemonics) வைத்து எதையும் சொல்லிக் கொடுங்கள். அவ்வாறு செய்தால் அதை அவர்கள் மறக்க மாட்டார்கள். 3. படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். 4. குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்ல வேண்டும். 5. மாவு சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது. ஏனென்றால் மாவுச்சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும். 6. முக்கியமாக தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்தால், நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் தகவல்களை ஷார்ட்டெர்ம் மெமரியில் இருந்து, லாங்டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும் . ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களது ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சுறுசுறுப்போடும் இருப்பாங்க

    Tags:



    Category: