Best Property Management in India
சென்னை
தமிழகத்தில் குடிநீருக்காக மக்கள் குடத்தை எடுத்துக்கொண்டு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
'இன்னும் சில வாரங்கள் மழை இல்லாமல் இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் அதிகமாக குடிநீர் பிரச்னையை சந்திக்கப்போவது நிச்சயம்.
திருவள்ளூர் பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, கூவம் ஆறு, ஆரணி ஆறு ஆகியவைதான் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்கள். இவை பராமரிக்கப் படாததுதான் மாவட்டத்தின் தண்ணீர் தட்டுப்பாடுக்கு முக்கியக் காரணம். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வருடத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் பெற ஆந்திர மாநில அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. ஆந்திராவில் இருந்து வரும் தண்ணீரைக் கொண்டுவர சரியான நடவடிக்கைகள் எடுக்காததும் தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம். சேதமான மதகுகள் சீரமைக்கப்படாததாலும், தண்ணீர் வரும் வழியிலேயே ஆந்திர விவசாயிகள் நீரை உறிஞ்சிவிடுவதாலும் தண்ணீர் முழுமையாகக் கிடைப்பது இல்லை. வருடத்துக்கு இரண்டு முறை என ஆந்திரா கொடுக்கும் 12 டி.எம்.சி. தண்ணீரில் 6 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தாலே பெரிய விஷயம் என்ற நிலைதான் உள்ளது.
பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கன அடி நீர் இருக்க வேண்டும். ஆனால், இன்று ஆயிரம் கன அடிகூட இல்லை. காஞ்சிபுரம் வழியாக பாலாற்றில் இருந்து ஆற்று நீரை கொண்டுவந்து செம்பரம்பாக்கம் ஏரியில் சேமித்து இருக்கின்றார்கள். அந்த ஏரியும் சரியான பராமரிப்பு இன்றி இருக்கிறது. ஆரணி ஆற்றில் மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆற்றில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழம் மணல் அள்ளப்பட்டுவிட்டதால்,நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம் முழுக்க பரவலாக வாரத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இன்னும் சில தினங்களில் 10 நாளுக்கு ஒருமுறை நீர் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் தவம் இருக்கின்றனர்.
மாதம் ஒருமுறை குடிநீர்
கிராமங்கள் வறட்சியின் கோரப்பிடியில் உள்ளது. குடிநீர் விநியோகம் வாரம் ஒருமுறை, சில பகுதிகளில் மாதம் ஒருமுறை என்ற அவலநிலைக்கு மாறியுள்ளது.
அழிவுக்கு காரணமான தொழிற்சாலைகள் ஆறு தன் தன்மையை இழக்க இன்னொரு காரணம், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள். ஆற்றுநீரை உறிஞ்சுவதோடு, கழிவுநீரை சுத்திகரிப்பும் செய்யாமல் ஆற்றில் விடுகின்றனர்'' என்று வருத்தத்துடன் சொல்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
குடம் ஏந்தும் மக்கள் வானம் பொய்த்துப்போனதால் தண்ணீருக்காக விவசாயிகள் மட்டுமல்லாமல், குடிநீருக்காகக் குடங்களை ஏந்தியபடி மக்கள் தினமும் மறியலில் குதிக்கும் நிலை ஏற்பட்டது.
மேட்டூர் அணை
சேலம் மாவட்டத்தில் இருக்கும் மேட்டூர் அணை திறந்துவிட்டால்தான், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கும் குடிப்பதற்கும் தண்ணீர். ஆனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 35 அடிக்கும் கீழே உள்ளது.
கால்நடைகள் இறந்த பரிதாபம்
வானம் பொய்த்துப்போக, கர்நாடகா கைவிரிக்க...பல இடங்களில் கால்நடைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் செத்து மடிந்த கொடுமையெல்லாம் அரங்கேறியிருக்கிறது.
வெளியேறும் விலங்குகள்
ஏற்காடு மலைப்பகுதியில் மான், மயில், காட்டுப்பன்றி, காட்டு எருமை போன்ற விலங்கினங்கள் உள்ளன. மலைகளில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்டதால் குடிப்பதற்கு தண்ணீர் தேடி வனங்களை விட்டு அவை வெளியே வரத் தொடங்கிவிட்டன. மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து நாய்களுக்குப் பலியாகும் கொடூரமும் நடந்திருக்கிறது.
பாலைவனமாகும் அபாயம்
கிணறு, போர்வெல் மூலம் நீர்கள் உறிஞ்சப்பட்டு பாசனம் செய்யப்படும் பகுதிகளில் மழை அளவு குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் பாலைவனமாக மாறிடும் என்பது விவசாயிகளின் கவலை.
கான்கிரீட் காடுகள்
ஒரு காலத்தில் ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட காஞ்சிபுரம், இப்போது ரியல் எஸ்டேட் அதிபர்களின் பார்வையில் சிக்கி, கான்கிரீட் காடுகளாகிவிட்டது. அதனால், மழையும் பொய்த்துவிட்டது.
1000 அடிக்கு கீழே சாதாரணமாக 100 அடி போர் போட்டால் தண்ணீர் வரும் பாலாறு படுகைப் பகுதியில் இப்போது 1,000 அடி போட்டாலும் புகைதான் வருகிறது. மணல் கொள்ளை போன பாலாறு காஞ்சிபுரம் மாவட்டத்தின் அடிப்படை நீர் ஆதாரம் பாலாறு. பாலாற்றில் உள்ள மணல்தான் நீரை தேக்கிவைத்து கொடுக்கும். பாலாற்றில் வெள்ளம் வந்தால், அதில் இருந்து ஏரிகளுக்கு நீர் போகும். இப்போது பாலாற்றில் வெள்ளமும் வருவது இல்லை. நீரைத் தேக்கிவைக்க அங்கே மணலும் இல்லை.
குறைந்த நிலத்தடி நீர்மட்டம்
தமிழகம் முழுவதும், நினைத்துப்பார்க்க முடியாத அளவில், அசுர வேகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
வீணாகும் தண்ணீர் கடலில் வீணாக கலக்கும் 150 டி.எம்.சி., நீரை சேமிக்க, கூடுதல் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்திற்கு, 1,921 டி.எம்.சி., நீர் தேவை. மக்கள் தொகை அதிகரிப்பால், இது, 2050ல், 2,038 டி.எம்.சி.,யாக உயரும். வழக்கமாக, 0.106 டி.எம்.சி., தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கூட, கடும் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
உறவுகளே வாருங்கள் இந்த கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தண்ணீரின் தேவையை பூர்த்திசெய்ய அனைத்து உயிர் இனங்களை காப்பாற்ற நம்மால் ஆன திட்டங்களை செயல்பாடுகளை செய்வோம்.
பறவைகளுக்கும் விலங்ககுக்கும் தெரியாது தண்ணீர் விற்பனைக்கு வந்து விட்டது என்றும் தண்ணீர் பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் கிடைக்கிறது என்றும்
நல்ல திட்டங்களை செய்தல் மூலம் நாம் அவைகளை காப்பாற்றுவோம் .
• தண்ணீர் பந்தல் அமைத்தல்
• பறவைகள் விலங்குகளுக்கு தண்ணீர் வைத்தல்
• சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல்
• மரங்களை உருவாக்குதல் மூலம் நம் தமிழகத்தை காப்போம்!....