வீட்டில் நீரை எப்படி எல்லாம் சேமிப்பது?

Best Property Management in India

  • +91 766 700 8999
  • Blog

    உலகில் கோடிக் கணக்கான மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி தவிக்கும் வேளையில் நீரை எவ்வாறு எல்லாம் சேமிப்பது என்பதை மக்கள் தெரிந்து கொள்வது நல்லது.
    nimmadhi June 12, 2019

             நீரை சேமிக்கும் முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். அதை முதலில் வீட்டில் இருந்து துவங்க வேண்டும். டாய்லெட்டை ஃபிளஷ் செய்ய, குளிக்கத் தான் அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. தினமும் குளிக்க, முகம் கழுவ, பாத்திரம் கழுவ, வாய் கொப்பளிக்க மட்டும் 300 லிட்டரை நீரை நாம் பயன்படுத்துகிறோம். இந்நிலையில் நீரை சேமிக்கும் முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
    
    enter image description here

    குழாய் பல் விளக்கும்போது குழாயை திறந்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டாம். கை கழுவும்போது, பல் விளக்கும்போது 5 நிமிடம் குழாயை திறந்து விட்டுக் கொண்டே இருப்பதால் 30 லிட்டர் நீர் வீணாகிறது.

    ரிப்பேர் பல வீடுகளில் குழாயை முழுவதுமாக திருக்க முடியாது. இதனால் தண்ணீர் சொட்டிக் கொண்டே இருக்கும். இதன் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்க குழாயை ரிப்பேர் செய்ய வேண்டும்.

    டிஷ் வாஷர் கையால் 10 நிமிடம் பாத்திரங்களை கழுவினால் 57 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. டிஷ்வாஷரில் பாத்திரங்களை கழுவினால் 8 லிட்டர் நீரே தேவைப்படுகிறது. இருப்பினும் டிஷ்வாஷர் முழுவதுமாக நிறைந்த பிறகு அதை பயன்படுத்தவும். கையால் பாத்திரம் கழுவும் போது குழாயை திறந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டாம்.

    வீடு வீட்டில் உள்ள அறைகளை தண்ணீர் ஊற்றி கழுவிவிடாமல் துடைத்து எடுக்கலாம். இதன் மூலம் தண்ணீரை சேமிக்க முடியும். பாதி பக்கெட் நீரில் கிருமி நாசினியை ஊற்றி வீட்டை துடைக்கலாம்.குளியல் வீட்டில் ஷவரில் குளி்க்கையில் ஷாம்பூ மற்றும் சோப்பு போடுகையில் ஷவரில் நீரை ஓடவிட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். இதன் மூலமாகவும் நீரை சேமிக்கலாம்.

    Tags:

    நீரை சேமிக்கும் முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்

    Category:

    உலகில் கோடிக் கணக்கான மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி தவிக்கும் வேளையில் நீரை எவ்வாறு எல்லாம் சேமிப்பது என்பதை மக்கள் தெரிந்து கொள்வது நல்லது.