Best Property Management in India
கோடை காலத்தில் தண்ணீர் அதிகளவு அருந்துவது மிகவும் அவசியம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாக தண்ணீர் அருந்தும் அளவை விட, வெயில் காலத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் அதிக அளவு அருந்த வேண்டும்.
வெயில் காலத்துக்கு உகந்த உடைகள் என்றால் பருத்து உடைகள் தான். பருத்தி ஆடைகளுக்கு வியர்வையை உறிஞ்சும் பண்பு உள்ளதால், வெளியில் செல்லும் போது பருத்தி ஆடைகளை உடுத்துங்கள்.
பையில் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்திருங்கள். முடிந்தால் அதில் எலுமிச்சை அல்லது சீரகம் போன்றவற்றை கலந்து அருந்தலாம். வெயிலில் செல்ல வேண்டி இருப்பவர்கள் சன் கிரீம் லோஷன்களை பயன்படுத்தலாம்.
கோடைக் காலத்திற்கு ஏற்றது எளிய உணவுதான். அதிலும் சைவ உணவு அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும். கோடையில் அசைவ உணவுகளைச் சாப்பிட்டால் அது சூட்டைக் கிளப்பி விடும். அசைவ உணவுகளில் பாக்டீரியாக்கள் எளிதல் தோன்றி உணவுப் பொருளை விஷத்தன்மை கொண்டதாக மாற்றிவிடுவது உண்டு. இந்த உணவை உண்ணும்போது வாந்தி, மயக்கம் ஏற்படும். சிலருக்கு வயிற்றில் இரைச்சல் ஏற்படும்.
இதனால் கோடைக் காலங்களில் இம்மாதிரியான உணவு வகைகளை குறைத்துக் கொள்வது நல்லது. மிகுந்த கார உணவுகளையும் எண்ணெயில் வதக்கிய உணவுப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. இவை சருமத்திற்குத் தொல்லை தரும். அதுமட்டுமின்றி அஜீரண கோளாறுகளையும் ஏற்படுத்தும். வெயில் காலத்தில், கேழ்வரகைக் குறைத்து கம்பு தானியத்தை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
கீரைகள் நல்லது உடலுக்குக் குளிர்ச்சி தரும் கீரைகள், நீர்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி, வாழைத்தண்டு சாறு குடிப்பது மிகவும் நல்லது. அது உடலிலுள்ள நீர் நன்கு பிரிய உதவுகிறது. நீராகாரம் காலையில் நீராகாரம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் இரவில் சாதத்தில் நீர் ஊற்றி வைத்தால் கோடை வெப்பத்திற்கு சாதம் கூழாக மாறிவிடும். இதற்கு இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது. அதனைக் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உடலைக் குளிர்விக்கும்.
வெப்பத்தினால் வேர்க்குரு தொல்லை அதிகம் இருக்கும். கோடையில் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை பனை நுங்கு. இந்த நுங்கு கொண்டு வேர்க்குரு உள்ள இடத்தில் தேய்த்தால் பலன் கிடைக்கும். –
நுங்கு கிடைக்காதவர்கள் சந்தனத்தை பூசலாம். உடல் உஷ்ணம் நீங்க: - உடல் உஷ்ணத்தில் அவதிப்படுகிறவர்கள் உணவில் வெந்தயத்தை அதிகம் சேர்த்தக்கொள்ளலாம். மணல்தக்காளி கீரை, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொண்டாலும் உஷ்ணம் தணியும். - திராட்சைப்பழத்திற்கு உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி மலச்சிக்கலையும் போக்கும்.